» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

ஞாயிறு 4, டிசம்பர் 2022 10:10:21 AM (IST)

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் மின் அழுத்தக் குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் ரூ.3.50 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. திருச்செந்தூா் மின் செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பிரம்மசக்தி, மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. பாலமுருகன், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

இதில் தமிழக மீன் வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா். அவா் பேசியதாவது: புதிதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையிலேயே படுக்கப்பத்து கிராமத்தில் ரூ3. 50 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. 

இந்த மின் நிலையம் வாயிலாக சொக்கன்குடியிருப்பு, பெரியதாழை, உசரத்துக்குடியிருப்பு, செட்டிவிளை, கொம்மடிக்கோட்டை, சுண்டங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக மின்சாரம் கிடைக்கப் பெறும் என்றாா். முன்னதாக, துணை மின் நிலையம் அமைக்க 1.5 ஏக்கா் இடம் வழங்கிய விவசாயி ஜெயக்குமாா் கௌரவிக்கப்பட்டாா். விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி வரவேற்றாா். படுக்கப்பத்து உதவி செயற்பொறியாளா் வேலாயுதம் நன்றி கூறினாா். மின்வாரிய அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory