» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)
சென்னையில் நடைபெற உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியில் பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 25.08.2022 முதல் 07.09.2022 வரை 14 நாட்கள் "மண்டல அளவிலான மதி சாராஸ் மேளா” என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி மற்றும் நவராத்திரி கண்காட்சி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் அனைத்து வகை பொருட்களும் கண்காட்சி மற்றும் விற்பனையில் வைத்து விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படுகிறது. ஆகவே, கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் பெயர், முகவரி, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களை 20.08.2022 மாலை 5.00 மணிக்குள் தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2வது தளம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) நேரடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தொடர்புக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்: 0461-2341282 என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)
