» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பங்காரு அடிகள் பிறந்தநாள் விழா: மக்கள் நலப்பணிகளுடன் கொண்டாட்டம்!

ஞாயிறு 3, ஜூலை 2022 8:13:01 PM (IST)



தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் 82வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்ட‌து.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் 82வது அவதார பெருமங்கல விழா தூத்துக்குடி கனிபேலஸ் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன், நடைபெற்ற சிறப்பு கூட்டு வழிபாட்டில் மகளிர் குங்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.  தொடர்ந்து மாவட்ட மகளிர் அணி தலைவி பத்மாவதி ஓம் சக்தி கொடியை  ஏற்றி வைத்தார். ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், தேனி சக்திபீட பொறுப்பாளர் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நலப்பணி விழாவிற்கு ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவர் சக்தி. ஆர்.முருகன் தலைமை வகித்தார். ஏழை எளிய மக்களுக்கு தொழில் செய்து பிழைக்க தையல் இயந்திரங்கள், வெட்கிரைண்டர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்கள் மற்றும் 108 பெண்களுக்கு சேலை, ஆடவர்களுக்கு வேஷ்டி துண்டு ஆகியவற்றை கூட்டுறவு பண்டக சாலை பொதுமேலாளர் கந்தசாமி வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட பொருளாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்.



விழாவில், மாவட்ட துணைத்தலைவர் பண்டாரமுருகன், செயலாளர் செந்தில் சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் செல்லத்துரை, வேள்விக்குழு தலைவர் கிருஷ்ணநீலா, பிரச்சார இணைச்செயலாளர் முத்தையா, மேலூர் சக்திபீட தலைவர் முத்துக்குமார், திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பத்மா, கோவில்பட்டி மன்ற பொறுப்பாளர் கோபிநாத், வட்டத்தலைவர்கள் கோவில்பட்டி பால்ச்சாமி, அழகர்சாமி, தூத்துக்குடி செல்வம், ஸ்ரீவைகுண்டம் வண்டி மலையான், அண்ணாநகர் மன்ற தலைவர் சிவஞானம், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், கழுகுமலை தலைவர் அழகர், உடன்குடி செல்வநாயகி உட்பட மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

V RADHAJul 4, 2022 - 11:42:24 AM | Posted IP 162.1*****

Om Sakthi Om

BalamuruganJul 3, 2022 - 10:09:10 PM | Posted IP 162.1*****

நலத்திட்ட உதவிகள் இன்னும் பலரை சென்றடைய பெரிய வணி நிறுவனங்கள் வரும் காலங்களில் உதவவேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் உதவுவதற்காக பாடுபட்ட சக்திகளுக்கு மனமார்ந்த நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory