» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.5லட்சம் கேட்டு 2பேர் கடத்தல்: 3பேர் கைது - பரபரப்பு தகவல்!

சனி 18, ஜூன் 2022 5:09:12 PM (IST)தூத்துக்குடியில் மாந்திரீக பொருள் தருவதாக ஏமாற்றியதால் ரூ.5லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 2பேரை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மடத்தூர் திரவிய ரத்னம் நகரைச் சேர்ந்தவர் ராஜ் மகன் குமார் (49), என்பவரை காரில் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.5லட்சம் பணம் தந்தால் விடுவிப்பதாகவும், அவரது மனைவி மெல்பா தங்கம் என்பவருக்கு செல்போன் மூலமாக கடத்தியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெல்பா தங்கம் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் சிப்காட்  காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.  கடத்தப்பட்டவரின் செல்போன் எண் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலையில் இருப்பதாக டவர் லொகேஷன் கிடைத்துள்ளது. இதுபோல் குமாரின் நண்பரான தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சேகர் என்பவரும் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்று கடத்தப்பட்டவர்களை மீட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். 

மேலும், இது தொடர்பாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த வெங்கட் ராவ் மகன் சதீஷ் (37), சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி, செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மணி (33), தெலங்கானாவைச் சேர்ந்த வெங்கடேஷ் (33) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியானது. கடத்தப்பட்ட குமாரும், சேகரும் நண்பர்கள். இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்தபோது சதீஷ் உள்ளிட்ட 3பேருடன் பழக்கும் ஏற்பட்டுள்ளது.

அப்போது குமார் மற்றும் சேகர் தங்களிடம் விலை உயர்ந்த டார்ச்பீச் எனும் மாந்திரீக பொருள் இருப்பதாக கூறி மூவரிடம் இருந்து 48,000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் அவரவர் ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மூவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த குமார் மற்றும் அவருடைய நண்பர் சேகர் ஆகியோரை கடத்திச் சென்று அடித்து தங்களிடம்  தருவதாகச் சொன்ன பொருளை  தரவில்லை என்றால் உன்னை விட மாட்டோம் என்று கடத்தப்பட்ட குமாரின் மனைவியிடம் நஷ்டஈடாக ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கடத்தப்பட்ட 2பேரை மீட்ட சிப்காட் போலீஸ்  இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் தனிப்படை போலீசாரை தூத்துக்குடி ரூரல் ஏஏஸ்பி சந்தீஸ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் பாராட்டினர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory