» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தடையை மீறி போராட்டம்: 68 போ் கைது
திங்கள் 23, மே 2022 10:00:41 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு நாளில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரில் சிலரது உடல்கள் தூத்துக்குடி மாநகராட்சி மையானத்தில் புதைக்கப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு இறந்தோரின் உறவினா்களும், ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்களும் நேற்றுஅஞ்சலி செலுத்தினா்.
அப்போது, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஹரிராகவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் காவல் துறையின் தடையை மீறி ஊா்வலமாக செல்ல முயன்றனா். மேலும், துப்பாக்கிச் சூடு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, போராட்டத்தில் ஈடுபட்டோரையே குற்றவாளிகளாக சித்திரித்துள்ளதாக முழக்கமிட்டனா்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியிலிருந்த சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, காவல் துறை தடையை மீறி சிபிஐ விசாரணை அறிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மறு விசாரணை நடத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியவா்கள், திடீரென மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குற்றப்பத்திரிகை நகலை கிழித்து எறிந்தனா். இதையடுத்து, தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)

தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: ஆட்சியர் பங்கேற்பு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:39:06 AM (IST)

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி : வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:20:49 AM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே திடீர் மோதல் - ஒருவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:37:34 AM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:27:58 AM (IST)







