» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பாலம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு எம்பவர் இந்தியா நன்றி!

சனி 21, மே 2022 3:24:17 PM (IST)

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு எம்பவர் இந்தியா அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர்,  தூத்துக்குடி பாராளுமன்ற அளவிலான சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினர்  ஆ.சங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 06.03.2022 அன்று தூத்துக்குடிக்கு வருகைதந்த போது நேரில் சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வி.வி.டி. சிக்னல் அருகில் மேம்பாலம் அமைக்க வேண்டுமெனவும், தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சிக்கு நேரிடையாக செல்வதற்கு சாலை வசதி செய்து தர வேண்டுமெனவும் மனு அளித்தோம்.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி இரயில் நிலையம் வரை சுமார் 26 கி.மீ. சாலை அமைக்கும் பணிக்காக 108 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தவும், இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.2853 இலட்சங்களை ஒதுக்கீடு செய்தமைக்காகவும், அதே போன்று வி.வி.டி. சிக்னல் அருகில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.950 இலட்சங்களை ஒதுக்கீடு செய்தமைக்காகவும் நுகர்வோர்கள், பொது மக்கள் மற்றும் வியாபரிகள் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

மேலும் இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குரிய ஆணைகளை பிறப்பிக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

KARNARAJ RAMANATHANமே 21, 2022 - 10:22:35 PM | Posted IP 162.1*****

GOOD PROJECTS FOR THOOTHUKUDI. THANKS TO ALL CONCERNED WHO PUT THEIR EFFORTS AND SUPPORTS

kannanமே 21, 2022 - 06:39:22 PM | Posted IP 162.1*****

அப்ப நீங்க சொல்லித்தான் வந்திச்சா...ரொம்ப

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory