» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
வெள்ளி 20, மே 2022 10:01:23 AM (IST)
"திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஓர் ஆண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் வீரபாண்டின்பட்டினத்தில் நேற்று இரவு நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவா ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, தி.மு.க ஆட்சியின் ஓர் ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். அப்ேபாது, அவர் கூறியதாவது: தி.மு.க. கடவுள் இல்லை என எப்போதும் கூறியது இல்லை. இந்துக்களுக்கு எதிரான கட்சியும் இல்லை. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய கட்சிதான் தி.மு.க. தி.மு.க. ஆட்சியில் தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 1,500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் ரூ.2,666 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் தான் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவுகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி. பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து உள்ளது. பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணித்து வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், பக்தர்கள் எளிதாக கோவிலுக்கு சென்று வரும் வகையிலும் புறவழிச் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)

தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: ஆட்சியர் பங்கேற்பு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:39:06 AM (IST)

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி : வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:20:49 AM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே திடீர் மோதல் - ஒருவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:37:34 AM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:27:58 AM (IST)







