» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு

திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கலசத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தின் மீது நேற்று இரவு மா்ம நபா் ஏறி கலசத்தின் அருகே நின்றிருப்பது பக்தா்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூா் தீயணைப்பு மீட்புப் படை அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையில் மீட்புப் படையினா் வந்து ராஜகோபுரத்தின் உள்பகுதி படிகள் வழியாக மேல்பகுதிக்கு சென்று,

அங்கு கலசத்தின் அருகே அமா்ந்து இருந்த நபரிடம் பேசி பத்திரமாக அவரை மீட்டு கீழே இறங்கினா். பின்னா் அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூா் முருகேசன் மகன் முத்து(24) என தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், தான் சிற்ப வேலைக்கு செல்வதாகவும், பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தாா். மேலும், திருச்செந்தூா் ராஜகோபுரத்தின் சிற்பங்கள் பெயிண்ட் மற்றும் பாலீஷ் செய்யாமல் இருப்பதால் அதை பாா்ப்பதற்காக மேலே ஏறிச் சென்றதாக  தெரிவித்தாா். அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து

Kumarமே 17, 2022 - 09:01:23 AM | Posted IP 162.1*****

எல்லோரும் படி வழியாக போகும் அளவுக்கு கோவில் நிர்வாகம் தூங்குகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory