» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி : குடும்பத் தகராறில் பயங்கரம்!

சனி 14, மே 2022 10:34:04 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கீழநட்டார்குளம் கிராமம், சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் திருப்பதி ராஜா (28). இவரது மனைவி வசந்தி (25). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் நேற்று கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், வசந்தி கணவர் திருப்பதி ராஜா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதில் உடல் வந்து படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அன்னராஜ், கொலை முயற்சி வழக்குப் பதிந்து வசந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

நண்பன்மே 14, 2022 - 02:17:56 PM | Posted IP 162.1*****

டிவியில் சீரியல் பார்த்து பார்த்து தமிழ்நாட்டில் பெண்கள் நாசமாக போய்கிட்டிருக்கிறார்கள். சன் டிவி ஐ மூடினால்தான் பெண்கள் திருந்துவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory