» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் உட்பட 3பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

சனி 7, மே 2022 3:49:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

கடந்த 08.04.2022 அன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதியிலுள்ள உள்ள ஒரு பள்ளியில் பயிலும் 9 குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சின்னகொல்லாபட்டி பகுதியை சேர்ந்த அருள்சீலன் மகன் தாமஸ் சாமுவேல் (57) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

கடந்த 11.04.2022 அன்று கயத்தாறு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கயத்தார் அய்யனார் ஊத்து பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் குருசாமி (55) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
 
கடந்த 14.04.2022 சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் மகாராஜா (32) என்பவரை சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்கண்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட தாமஸ் சாமுவேல், குருசாமி, மற்றும் மகாராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory