» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் ரூ.4கோடி செலவில் திருப்பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!

திங்கள் 17, ஜனவரி 2022 12:21:18 PM (IST)



தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுற்றுசுவர் முழுவதும் 63 கல் தூண் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல் உள்பட சுமார் ரூ.4 கோடி மதிப்பில் 35ஆயிரம் சதுரஅடி  பரப்பளவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளின் தொடக்க விழா  இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.  

விழாவில் இந்துசமய அறநிலையதுறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பணி கமிட்டி தலைவர் விஎஸ்ஏ ஜெயராமன, துணைத் தலைவர் ஏவிஎம் முத்துராஜ், செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன், கருப்பசாமி, கேகேஜி இளங்கோவன், அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  உஷா தேவி,  கோவில் அர்ச்சகர் வைகுண்டராமன், முக்கிய பிரமுககர்கள் ஆனந்தசேகரன், ஏ.சி.செந்தில் குமார், மந்திரமூர்த்தி, கந்தசாமி, சுரேஷ்குமார், கோட்டுராஜா,ராமாகிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி மகமை தலைவர் கந்தையா, எல்ஐசி சிவராமகிருஷணன், பிஎஸ்கே.ஆறுமுகம், பொறியாளர் ரெங்கசாமி, ஸ்தபதி ரமேஷ், வழக்கறிஞர் நீலவேணி, எம்ஆர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

kumarJan 18, 2022 - 01:18:11 PM | Posted IP 108.1*****

intha thiruppaniyil arasin pangalippu evvalavu endru therinthu kollalama?

வாழ்த்துகள்Jan 17, 2022 - 01:14:06 PM | Posted IP 162.1*****

ஏற்கனவே தமிழிசை அடிக்கல் நாட்டினாக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory