» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : அதிமுக ஆலோசனை!

திங்கள் 26, ஜூலை 2021 5:40:21 PM (IST)தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலின்டர் மானியம் ரூ.100/-, தடையில்லா மின்சாரம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000/- ஊக்கத் தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசை கண்டித்தும்,  விடியல் தர போவதாக வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு உண்மையாக ஆட்சி நடத்த வலியுறுத்தியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நாளை அறப்போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார். அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், கழக மருத்துவ அணி இணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory