» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனாவால் மகன் மரணம்: ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை!

திங்கள் 26, ஜூலை 2021 4:40:00 PM (IST)

கோவில்பட்டியில் கரோனாவால் மகன் உயிரிழந்ததால் மனவேதனையில் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

சென்னை ஜேஜே நகரைச் சேர்ந்தவர் ராஜ் மகன் அருணாசலம் (66), இவரது மனைவி கலைச்செல்வி (55). இந்த தம்பதியரின் மகன் நிர்மல் ராஜ் சென்னையில் வசித்து வந்தார்.  அருணாச்சலம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், அவரது மகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் கடந்த மே மாதம் உயிரிழந்துவிட்டார். 

இதனால் அருணாச்சாலம் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அவர் கோவில்பட்டி - நல்லி இரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரேனாவால் மகன் உயிரிழந்ததால் தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory