» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி

வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 24 விசாரணைகள் நடந்துள்ள நிலையில், 25வது கட்ட விசாரணை கடந்த 22ம் தேதி தொடங்கியது. இந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. 

இந்நிலையில், தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "25வது கட்ட விசாரணையில் 33பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 26பேர் ஆஜராகினர். போராட்டத்தின்போது காயம் அடைந்த போலீசாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடந்தது. இதுவரை 943பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 640பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். 1889 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அடுத்த கட்ட விசாரணை மார்ச் 15ம் தேதி துவங்கும். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 27பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது மேலும் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். 

கரோனா காரணமாக 9 மாதங்களாக விசாரணை தடைபட்டது.  ரஜினி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக கோரிக்கை விடுத்தார். அது சாத்தியம் இல்லாதது. விசாரணையை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளதால் ரஜினிகாந்த், தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என விரும்புகிறோம். இன்னும் சுமார் 400பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க பரிந்துரை செய்துள்ளோம். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் எங்கள் விசாரணை தொடரும்" என்றார்.  பேட்டியின் போது சிறப்பு அதிகாரி பாண்டுரங்கன் உடனிருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory