» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

குலசேகரப்பட்டினத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, உடன்குடி, தேரியூர் பகுதியில், உடன்குடி, புதுமனை கோட்டைவிளை பகுதியை சேர்ந்த செரீப் மகன் சாகுல் ஹமீது (எ) அமீர் (24) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam


Thalir Products
Thoothukudi Business Directory