» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

செய்துங்கநல்லூர் அருகே ஆறாம்பண்ணையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறாம்பண்ணையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மர்கஸ் வளாகத்தில் மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் தமீம் அன்சாரி, மருத்துவ அணி செயலாளர் ரஷீத் காமில், ஆறாம்பண்ணை கிளை தலைவர் அப்துல்ஹமீது, முன்னாள் நிர்வாகிகள் அப்துல்வஹாப், அப்துல்காதர், காஜாமுஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முறப்பாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தங்களை சேகரித்தனர். இம்முகாமில் 38பேர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட துணைத் தலைவர் ரத்ததானத்தின் அவசியம் குறித்தும், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய நலப்பணிகள் குறித்தும், வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜாஹிர்உசேன் பொதுசுகாதாரம் குறித்தும் எடுத்துரைத்தனர். முடிவில், கிளை மாணவரணி அல்தாப் நன்றி கூறினார்.முகாமிற்கான ஏற்பாடுகளை கிளை மருத்துவ அணி செயலாளர் செய்யதுசாகுல் ஹமீது தலைமையில் கிளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)

தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)
