» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

கோவில்பட்டியில் நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறையின் மூலம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 29.01.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கல்லூரிக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று (27.01.2021) ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறையின் மூலம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 29.01.2021 அன்று நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களில் கரோனா தொற்றின் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள்.
எனவே தற்பொழுது நிறை நபர்கள் வேலைக்கு தேவைப்படுகிறது. நமது மாவட்டத்தில் நிறைய பேர் வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளனர். அதையெல்லாம் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகிற 29ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளோம். முகாமில் இப்போது 102 கம்பெனிகள் வர உள்ளார்கள். மேலும் நிறைய கம்பெனிகள் பங்கேற்க பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 3000 முதல் 4000 இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகாமில் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு துறையின் மூலம், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற WWW.tnprivatejobs.tn.gov.in இணையதளம் உள்ளது அதில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம் எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், இளைஞிகள் கோவில்பட்டியில் 29ம் தேதி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தாளாளர் அருணாச்சலம், வேலைவாய்ப்புதுறை உதவி இயக்குநர் பேச்சியம்மாள், வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, கல்லூரி இயக்குநர் சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாஸ்முருகவேல், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)

தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)
