» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் - 4பேர் கைது

புதன் 27, ஜனவரி 2021 11:18:53 AM (IST)தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் சுமார் ரூ.3 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக தூத்கதுக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து கியூ பிரிவு இன்பெக்டர் விஜய அனிதா, சப் இன்பெக்டர்கள் ஜீவமணி, வேலாயுதம், காவலர்கள் பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், இருதயராஜ் ஆகியோர் தூத்துக்குடி - திருசெந்தூர் ரோடு முள்ளகாட்டில் ரோந்து சென்றனர். அப்போது முள்ளக்காட்டில் இருந்து கோவளம் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 2.75 டன் விரலி மஞ்சள், 125 கிலோ ஏலக்காய், 1.5 டன் மஞ்சள் தூள், மற்றும் 125 கிலோ சிகரெட் தூள் ஆகியன இருந்தது. இவை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பாலகணேஷ் (50), மேலும் லாரியில் வந்த சாயல்குடியைச் சேர்ந்த மூக்கையா மகன் சுப்பிரமணியன் (60), சாயர்புரத்தைச் சேர்ந்த சந்தியாகு மகன் ஜெபமணி (38), சுப்பிரமணி மகன் அரிசந்திரன் (20) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட விரலி மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory