» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை அரிவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

புதன் 27, ஜனவரி 2021 8:24:39 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த முத்துவேல் மகன் கள்ளத்தியான் (22). இவர் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மாமியார் ஜான்சிராணி அந்தப் பகுதியில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு தண்ணீர் நனைக்க மனைவியுடன் சென்றுகொண்டிருந்தபோது அவரது உறவினரான டேவிட்ராஜா என்பவர் கள்ளத்தியானின் மனைவியை ஜாடையாக பேசியுள்ளார். 

இதனை ஜான்சிராணி தட்டிகேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டேவிட்ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீசியுள்ளார். இதில் கள்ளத்தியானுக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து டேவிட்ராஜா கொலைமிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டாராம். காயமடைந்த கள்ளத் தியான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டேவிட்ராஜா மீது முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thalir Products




Thoothukudi Business Directory