» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3¼கோடி உண்டியல் வருமானம்

புதன் 27, ஜனவரி 2021 8:02:22 AM (IST)

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை மூலம் ஜனவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். ஜனவரி மாத உண்டியல் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.  கடந்த 20-ந் தேதி எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611 ரூபாய் கிடைத்திருந்தது. உண்டியல் 2-வது முறையாக நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. 

நிரந்தர உண்டியலில் இருந்து 73 லட்சத்து 35 ஆயிரத்து 935 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 699 ரூபாயும் கிடைத்தது. இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்த்து மொத்தத்தில் 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்ந்து 1, 503 கிராம் தங்கமும், 24 ஆயிரத்து 546 கிராம் வெள்ளியும், 105 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory