» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்

வெள்ளி 22, ஜனவரி 2021 11:20:40 AM (IST)தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 2ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அரசின் அனுமதி பெற்று முறையாக பதிவு செய்து 263 விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றன. இந்நிலையில் தருவைகுளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 3 விசைப் படகுகளையும் மீன்துறை அனுமதியில்லாமல் விதிமுறைகளை மீறி தருவைகுளத்திற்கு கொண்டு சென்றுவிட்டாராம். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் சேவியர் வாஸ் தலைமையில் 260 விசைப் படகுகளின் உரிமையாளர்களும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 2ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவிலை. படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி 150 நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. 

மீன்துறை அலுவலகத்தில் முற்றுகை 

இந்நிலையில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மற்றும் உரிமையாளர்கள் பீச் ரோட்டில் உள்ள மீன்த்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் இணை இயக்குநர் (பொ) தீபா பேச்சுவார்த்தை நடத்தினாார். மீனவர்கள் போராட்டம் எதிரொலியாக, மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thalir ProductsThoothukudi Business Directory