» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் ரூ. 1.53 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

புதன் 2, டிசம்பர் 2020 8:23:40 AM (IST)

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 1.53 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதம்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி நேற்று கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

கோயில் இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி தலைமையில், உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், ஆய்வா்கள் மு.முருகன், பூ.நம்பி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 38 ஆயிரத்து 556 ரூபாயும், தங்கம் 1,112 கிராம், வெள்ளி 6,922 கிராம், பித்தளை 11,660 கிராம், செம்பு 2,910 கிராம், தகரம் 1,720 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 121-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory