» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார், மினி லாரி மோதிய விபத்தில் பெண், குழந்தை பலி : மேலும் 4 பேர் படுகாயம்

புதன் 2, டிசம்பர் 2020 8:05:44 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே கார், மினிலாரி மோதிய கோர விபத்தில் பெண்ணும் அவரது -2 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரியை சோ்ந்தவா் ஆதிநாதன் (58). இவரது மனைவி சீதை ஜானகி (50). மகன் வெங்கடேஷ் (30), அவரது மனைவி ஸ்ரீவரமங்கை (28). மகள் தாமிரபரணி(2). இவா்கள் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று ஒருகாரில் ஆழ்வாா்திருநகரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனா். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே சுப்பிரமணியபுரத்தில் எதிரே வந்த லோடு வேன் காா் மீது மோதியதாம்.  இதில் காரில் இருந்த குழந்தை தாமிரபரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

ஆதிநாதன், சீதைஜானகி, வெங்கடேஷ், ஸ்ரீவரமங்கை ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும் இவா்களது காருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஏரலைச் சோ்ந்த இளைஞரும் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். காயமடைந்த 5 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஸ்ரீவரமங்கை உயிரிழந்தாா். இந்த விபத்தால் நெல்லை திருச்செந்தூா் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory