» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமாவளவனை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; 70 பேர் கைது

ஞாயிறு 25, அக்டோபர் 2020 9:34:30 AM (IST)



இந்து மத பெண்களை இழிவாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரைக் கண்டித்து தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், மாவட்ட செயலாளர்கள் கசமுத்து, அன்பு சுந்தர், பிரபாகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டும்பெருமாள், நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், நகர பொருளாளர் மணி, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்வேல், பிருத்விராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 33 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கயத்தாறு மேலபஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இந்து மத பெண்களை இழிவாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9  பேரை கயத்தாறு போலீஸார் கைது செய்தனர். கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் இந்து முன்னணியின் நகரப் பொதுசெயலர் சுதாகரன் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13  பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதுபோல தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory