» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

ஞாயிறு 12, ஜூலை 2020 9:33:20 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 175 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 14 பேர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து உள்ளனர். இந்நிலையில் காயல்பட்டினத்தை சேர்ந்த 58 வயது நிரம்பிய ஆண், தூத்துக்குடியை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் தினமும் பாதிப்பு அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் 175 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். பிரையண்ட்நகர், அமுதாநகர், டூவிபுரம், கிருஷ்ணராஜபுரம் உள்பட மாநகராட்சி பகுதியில் மட்டும் 62 பேரும், கோவில்பட்டி பங்களா தெரு, மந்திதோப்பு, ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் என மொத்தம் 175 பேருக்கும்  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதிகரித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory