» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி : நண்பர்கள் 3 பேர் காயம்

ஞாயிறு 12, ஜூலை 2020 9:22:36 AM (IST)

கயத்தாறு அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர்கள் சுடலை (35), அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக். இவர்கள் 4 பேரும் நண்பர்கள். சுடலை சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 4 பேரும் திருமலாபுரத்தில் இருந்து காரில் கடம்பூருக்கு சென்றனர். அங்கு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் திருமலாபுரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அரிகிருஷ்ணன் ஓட்டினார்.

திருமலாபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் வந்தபோது, திடீரென்று கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் சிறிதளவு கிடக்கும் தண்ணீரில் கார் விழுந்தது. கிணற்றுக்குள் கார் விழுந்தபோது அதன் கதவு திறந்ததில் சுடலை வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக கயத்தாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுடலைக்கு இசக்கியம்மாள் (30) என்ற மனைவியும், 5, 6 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory