» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் போலீஸ் உட்பட 2பேருக்கு கரோனா

வெள்ளி 10, ஜூலை 2020 12:15:34 PM (IST)

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் உட்பட 2பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் சக போலீசார் பீதியடைந்துள்ளனர். . 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கும், ஆண் காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காவலர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பெண் போலீஸ் உட்பட 2பேருக்கு தொற்று உறுதியானதால் சக போலீசார் பீதியடைந்துள்ளனர். மேலும், தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 


மக்கள் கருத்து

தூத் துகுடியன்Jul 11, 2020 - 09:04:22 AM | Posted IP 162.1*****

மிக வேகமாக அதிகரித்து வரும் corana வை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒரு சில நாட்களுக்கு ஊரடங்கு போடுவது தான் தீர்வு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Anbu Communications



Black Forest Cakes



Thoothukudi Business Directory