» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் போலீஸ் ஏட்டு உட்பட இருவருக்கு கரோனா : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி
புதன் 8, ஜூலை 2020 5:48:01 PM (IST)
குரும்பூரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் வடக்கு பரதர் தெருவை சேர்ந்த பெண் ஒருவர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் திருச்செந்தூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள கரோனா வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு காய்ச்சல் அதிகமானதும் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல் குரும்பூர் அன்பு நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த ஏரல் தாசில்தார் அற்புதமணி, ஆழ்வை., பிடிஓ பாக்கியலீலா, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன், விஏஓ பிரான்சிஸ் பாரதி, தேசிகன், பஞ்., தலைவர்கள் பானுப்பிரியா, நாலுமாவடி இசக்கிமுத்து, துணைத்தலைவர் ராஜேஷ் ஆகியோர் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளை தடுப்பு வைத்து அடைத்து, கிறிமி நாசினி தெளித்தனர். குரும்பூர் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்
வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)

அகல இரயில்பாதை நிலஎடுப்பு தொடர்பாக 29ம் தேதி பொது விசாரணை : ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

மாற்று சமூகத்தில் வாதிரியார் சமுதாயத்தை இணைக்க எதிர்ப்பு : வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து மக்கள் போராட்டம்
வியாழன் 21, ஜனவரி 2021 4:36:58 PM (IST)
