» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி உப்பாற்று ஓடையை குறுக்கிய அதிகாரிகள்: ஆட்சியர் ஆய்வு - விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு!!

புதன் 8, ஜூலை 2020 5:14:34 PM (IST)தூத்துக்குடி உப்பாற்று ஓடையை குறுக்க பொதுப்பணித் துறை முயற்சிப்பதாக குற்றம்சாட்டி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார், கடம்பூர், ஒட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய காற்றாற்று வெள்ளம் புதுக்கோ்ட்டை பகுதியில் உப்பாற்று ஓடையாக மாறி கோரம்பள்ளம் குளத்திற்கு வந்தடைகிறது. இந்த குளத்தின் உபரி நீர் 24 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், புதிய துறைமுகம் வழியாக கடலுக்குச் செல்கிறது. இந்நிலையில், கடந்த 2015ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, உப்பாற்று ஓடையில் தனியார் ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் இருந்ததால் தூத்துக்குடி நகர் பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது.  

அத்திரமரப்பட்டி பகுதிகளில் உள்ள வயல்வெளிகள், வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து 24 மதகுகளில் இருந்து வெளியேற்றப்படும் ஓடையின் கரைகளை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.27.50லட்சத்தில் கரைகளை பலப்படுத்தவும், நிரந்தரமாக தூர்வாரும் பணிகளுக்கு ரூ.58.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. 

தற்போது அத்திமரப்பட்டியில் உப்பாற்று ஓடை கரைகளை பலப்படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில், வீரநாயக்கன் தட்டு பகுதியில் பொதுப்பணித் துறையினர் ஓடையை குறுக்கி கரையை பலப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு தவறான தகவலை கொடுப்பதாக அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஆட்சியர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் பத்மா, உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் ரத்னம் ஆகியோர் வந்த வாகனத்தை விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா, நிர்வாகிகள் சேகர், கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, வியாபாரிகள் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜா, சிபிஎம் புறநகர் செயலாளர் ராஜா, நாம் தமிழர்கட்சி வேல்ராஜ் மற்றும் விவசாயிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த தாசில்தார் செல்வகுமார், அவர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினார். பழைய வரைபடத்தில் உள்ளபடி உப்பாற்று ஓடையை அளந்து கரைகள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory