» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை

திங்கள் 6, ஜூலை 2020 5:54:39 PM (IST)

தந்தை மகன் மரணம் தொடர்பாக சம்பவம் நடந்த தினத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். 

இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த காவலர்கள் அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் பியூலா மற்றும் காவலர் தாமஸ் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்கள். இதனையடுத்து மேலும் 6 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதுபோல் சாத்தான்குளம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீசார் ஒரே நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், மேற்கொண்டு சில காவலர்கள் மற்றும் அன்று காவல்நிலையத்தில் இருந்த கரோனா தடுப்பு பணி தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory