» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் ஆய்வு தமிழரின் வரலாற்றை உறுதி படுத்தும்: வணிகவரித்துறை இணை ஆணையர் பேட்டி

ஞாயிறு 31, மே 2020 7:58:53 PM (IST)ஆதிச்சநல்லூரில் நடைபெறும் ஆய்வு தமிழரின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக உறுதிபடுத்தும் என வணிகவரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி தெரிவித்தார்.

உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 25ம் தேதி அகழாய்வு பணி துவங்கியது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் துறை லோகநாதன் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிவகளையில் அகழாய்வு இயககுனர் பிரபாகரன் தலைமையில் தொல்லியல் துறை தங்கதுரை உள்பட 20ககு மேற்பட்டவர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு கட்டதரப்பினரும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியினை பார்வையிட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல் துணை ஆணையாளர் சரவணன், துணை ஆட்சியர் சிவகுருபிராபகரன் உள்பட பலர் ஏற்கனவே பார்வையிட்டு விட்டு சென்றனர். 

இந்நிலையில் வணிகவரித்துறையின் கூடுதல் ஆணையரும், சென்னை தீர்ப்பாயத்தின் துறை உறுப்பினருமான தேவேந்திர பூபதி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு அவரது குழுவினருடன் வந்தார். அவருக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆய்வு குறித்து விளக்கமளித்தார். பின்னர் அவரது குழுவினர் அகழாய்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். அதன் பின் அவர் கூறியதாவது, ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு தமிழரின் முக்கியமான அகழ்வாய்வு. தமிழரின் பண்பாடு, வளர்ச்சி, பரிணாமங்களை முக்கிய களமாக இதை நான் பார்க்கிறேன். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் தமிழரின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும். தமிழரின் கடல் வாணிபம், கடல் வாணிபத்தோடு தொடர்புடைய மக்கள் சொல்லப்போனால் இந்த அகழ்வாய்வில் பல்வேறு கட்ட தரவுகளுக்கு உறுதிகொடுக்கக்கூடிய ஆவணங்களை இந்த அகழ்வாய்வில் நாம் காண முடியும். 

இது போலவே சிவகளை ஆய்வும் பல்வேறு அபூர்வ தகவலை நமக்கு தரும். எனவே ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வை நான் உள்பட உலகமே ஆவலோடு எதிர்பார்தது காத்து இருக்கிறார்கள். இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். என்றார். அதன்பின் அவர் சிவகளைக்கு சென்றார் அங்கு அகழாய்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டார். மேலும் சிவகளை பரம்பில் பல்வேறு இடங்களை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் கூட்டிச்சென்று காண்பித்தார். அவர் அந்த இடங்களைபற்றி விரிவாக கேட்டறிந்தார். அவருடன் திருநெல்வேலி பண்பாட்டு மையம் தமிழ் வளர்ச்சி துணைத் தலைவர் மயன் ரமேஷ் ராஜா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கவிஞர் கடங்கநேரியான், உள்பட பலர் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory