» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி : 2ம் கட்ட நிவாரண தொகை வழங்க கோரிக்கை

சனி 23, மே 2020 11:05:11 AM (IST)

பத்திரிகையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜே) நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தூத்துக்குடி மாநகர் , மாவட்ட தலைவர் முருகன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, தூய்மைபணியாளர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறை ஆகியோரின் பணி முக்கியமானதாக உள்ளது. நோய் தொற்று காலத்திலும் உழைக்கும் பத்திரிகையாளளுக்கு நிவாரண நிதி வழங்க டியூஜே மாநில தலைவர் சுபாஷ் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

கோரிக்கையை ஏற்று ரூ. 3 ஆயிரம் நிவாரண உதவியை அரசு அறிவித்தது. அத்தொகை  மாவட்டம் முழுவதிலுமுள்ள பத்திரிகையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தூத்துக்குடி மாநகர், மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே) நன்றியை தெரிவித்து கொள்கிறது.

அரசு வழங்கியுள்ள நிவாரண தொகை இன்னும் சில பத்திரிகையாளர்களுக்கு வரவு வைக்கப்படவிலை என கூறப்படுகிறது. மேலும் நிவாரண உதவித்தொகை ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு முடிவுக்கு வராததால் பத்திரிகையாளர்கள் நலன்கருதி மீ்ண்டும் 2ம் கட்ட நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory