» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது

சனி 23, மே 2020 8:06:20 AM (IST)

ஆத்தூர் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி காந்தி நகரைச் சேர்ந்தவர் திருமணி மகன் ராஜதுரை (24). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 16-ந்தேதி இரவில் முக்காணி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கட்டிட காண்டிராக்டர் கனகராஜின் வீட்டின் முன்பு நின்றபோது, அங்கு வந்த சிலர் ராஜதுரையை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். மேலும் ராஜதுரையின் அண்ணன் சேர்மத்துரை (26), ஆத்தூர் சேனையர் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துசெல்வகுமார் (24) ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், கட்டிட காண்டிராக்டர் கனகராஜை கொலை செய்ய வந்த கும்பலை ராஜதுரை தடுத்தபோது கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக முக்காணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (40) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜதுரை கொலை வழக்கு தொடர்பாக ஆத்தூர் அருகே புல்லாவெளியைச் சேர்ந்த முருகன் மகன் அதிபன் (22), முக்காணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இளங்கோவன் (30), ஆறுமுகநயினார் மகன் வெங்கடேஷ் (24), மாரிமுத்து மகன் சூர்யா (19) மற்றும் 15, 17 வயது சிறுவர்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அதிபன் உள்ளிட்ட 4 பேரை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர். கைதான 2 சிறுவர்களையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory