» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அந்தோணியார்புரம் சுற்றுப்புற எல்லைகள் மூடல்

ஞாயிறு 29, மார்ச் 2020 12:22:51 PM (IST)

கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் சுற்றுப்புற எல்லைகள் மூடப்பட்டது.

கொராேனா  வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வெளியே வர வேண்டாம் என அனைத்து இடங்களிலும் காவல் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகள் முன்னெச்சரிக்கையாக தங்கள் ஊருக்குள் அன்னியர்களை அனுமதிப்பதில்லை. எல்லைகளையும் மூடியுள்ளனர். அந்த வகையில் கொராேனா காரணமாக தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் சுற்றுப்புற எல்லைகள் மூடப்பட்டது. இது குறித்த அறிவிப்பும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory