» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் செயல்பட உள்ள மார்க்கெட் : கோவில்பட்டி தாசில்தார் ஆய்வு

ஞாயிறு 29, மார்ச் 2020 12:08:37 PM (IST)கோவில்பட்டியில் பேருந்து நிலையத்தில் செயல்பட உள்ள மார்க்கெட் இடத்தை கோவில்பட்டி தாசில்தார், ஆணையர் ஆய்வு நடத்தினர்.

கோவில்பட்டி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவினை முன்னிட்டு கடந்த 4 தினங்களாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக வந்த காரணத்தினால் இன்று மற்றும் நாளை என 2 தினங்கள் மார்கெட் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சிலர் கடைகளை திறந்து வியாபாரம் செய்த காரணத்தினால் மக்கள் கூட்டம் அதிகமாக வர தொடங்கினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து திறந்து இருந்த கடைகளை அடைக்க சொல்லி, கூடியிருந்த மக்களை மார்க்கெட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். 

அறிவிப்பினை மீறி கடைகளை திறந்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து சென்றனர். இதற்கிடையில் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள் கிழமை முதல் செயல்பட உள்ள மார்க்கெட் குறித்து வியாபாரிகளுடன் தாசில்தார் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி சார்பில் மேற்கொண்டு வரும் துப்புரவு பணிகளையும் பார்வையிட்டனர். மேலும் ரேஷன் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக நகராட்சி ஊழியர்கள் கோடுகள் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory