» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்

புதன் 26, பிப்ரவரி 2020 4:26:36 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா நாளை மறுநாள் (பிப்.28) கொடியேற்றத்துடன் தவங்குகிறது. மார்ச் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

முருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா நாளை மறுநாள் (பிப்.28) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 3-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. மார்ச் 5-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வோ் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மார்ச் 6-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பெரிய வௌ்ளிச் சப்பரத்தில் வௌ்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் வந்து, அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேருகிறார். மார்ச் 8-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 9-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications



Black Forest Cakes



Thoothukudi Business Directory