» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கப்பல் இஞ்சினியர் உட்பட 2பேர் வெட்டி கொலை : தூத்துக்குடியில் பரபரப்பு!

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 7:10:13 PM (IST)தூத்துக்குடியில் கப்பல் இஞ்சினியர் உட்பட 2பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிவந்தாகுளம் 2வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பூ மகன் முகேஷ் என்ற முருகேசன் (40). இவர் கப்பலில் மரைன் இஞ்சினியர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா குமாரி. இவர் டெல்லியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. முருகேசன், கடந்த 2மாதங்களுக்கு முன்பு தான் கப்பலில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ளார். தற்போது தனது வீட்டின் அருகிலேயே புதிய வீடு கட்டி வருகிறார்.

இவரது நண்பர், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 13 வது தெருவைச் சேர்ந்த பிச்சைக்கனி மகன் விவேக் (42).இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் இன்று மதியம் 3மணியளவில் தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில், சிவந்தாகுளம் சந்திப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிகன்டன் என்பவர் வேகமாக சென்றதைப்பார்த்து முருகேசன், மெதுவாக செல் என்று சொன்னாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சமாதானம் பேசி மணிகன்டனை அனுப்பி வைத்துள்ளனர். 

இதில் ஆத்திரம் அடைந்த மணிகன்டன் தனது நண்பர்களிடம் விவரத்தை கூறி முருகேசனை கொலை செய்வதற்கு 3பைக்குகளில் 7பேர் வந்து சிவந்தாகுளம் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த முருகேச்னை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற விவேக்கையும் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள். இருவரும் உயிருக்கு பயந்து ஓட முற்பட்ட போது இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில், சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விவேக்கை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன், டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஜெயப்பிரகாஷ், தங்ககிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஊர்க்காவலபெருமாள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழ்க்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Point breakSep 17, 2019 - 11:55:39 AM | Posted IP 162.1*****

Kindly cut every murder accused person leg vein

RajeSep 17, 2019 - 08:10:08 AM | Posted IP 108.1*****

குற்றங்களுக்கு அதிக காரணம் போதைப் பொருள்களே அதை முதலில் அரசு தடை செய்ய வேண்டும்..

நோட் requiredSep 16, 2019 - 11:44:16 PM | Posted IP 108.1*****

லேட் தேம ஆல்சோ பெ கில்லெட் பய தி போலீஸ் ஒபிபிசெர் தென் ஒன்லி தே வில்ல நோட் டூ such கிந்து of activities ஹேன்ஸ் forth ..

பாலாSep 16, 2019 - 08:33:31 PM | Posted IP 162.1*****

கொலைதானாய பண்ணி இருக்கான்.. அவன் என்னே ஹெல்மெட் போடாமலா போனான். ஹெல்மெட் போடலானாதான் குற்றம்..

தமிழன்Sep 16, 2019 - 06:31:27 PM | Posted IP 162.1*****

பார்த்து போ என்று சொன்னதற்கெல்லாம் கொலை செய்வது இப்போதெல்லாம் அதிகரித்து விட்டது... அரசு குடிக்க வைத்தே இந்த இனத்தை கேடுகெட்ட இனமாக மாற்றிவிடும்... இதுதான் நிதர்சனமான உண்மை....

manithanSep 16, 2019 - 10:16:26 AM | Posted IP 162.1*****

கொலை குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனை அடுத்த முறை யாரும் செய்யாத அளவுக்கு கடுமையானதாக இருக்க வேண்டும்...

The humanSep 16, 2019 - 09:14:41 AM | Posted IP 162.1*****

Please encounter the 7 killer peoples .encounter is the Only way is to solve the problem ..

MahendranSep 16, 2019 - 06:53:46 AM | Posted IP 173.2*****

காவல்துறையை இந்த அரசும் நீதிமன்றமும் ஹெல்மெட்டை மட்டுமே பிடிக்கவைத்தால்.. மற்ற குற்ற சம்பவங்களை யார் தடுப்பது. Pearl city now became a killer city.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest CakesThoothukudi Business Directory