» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓவை வேன் ஏற்றி கொல்ல முயற்சி: 2பேர் கைது - 5பேருக்கு வலை!!

புதன் 11, செப்டம்பர் 2019 12:11:15 PM (IST)

மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓவை வேன் ஏற்றி கொல்ல முயன்றதாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு நேற்று மாலை செய்துங்கநல்லூர் - வசவப்பபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது முத்தலாங்குறிச்சி பாலத்தில் மணல் ஏற்றி வந்த 2 லோடு வேன்களை நிறுத்துமாறு செய்கை காட்டியும் வேன் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து விஏஓ தனது பைக்கில் அந்த வேன்களை முந்திச் சென்று குறுக்காக நிறுத்த வேனை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஒரு வேன் அவர் மீது இடித்து விட்டு நிற்காமல் விட்டது. இதுகுறித்து அவர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான போலீசார் அந்த வேன்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரைக் கண்டது வேனில் இருந்தவர்கள் தப்பியோடினர். அதில் முத்தாலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மகராஜன் மகன் பெருமாள் (30), கொம்பன் மகன் மாணிக்கம் (22) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஈனமுத்து மகன்கள் மூக்காண்டி, நல்லதம்பி, இசக்கி மகன்கள் முத்து, முன்டசாமி, பிச்சைக் கண்ணன் மகன் கர்ணன் ஆகிய 5பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து விஏஒ கந்தசுப்பு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது பைக் லேசான சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர்தப்பினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory