» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிராக்டர் பறிமுதல்: காவல் துறையைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 12:54:41 PM (IST)கயத்தாறு அருகே விவசாயப் பயன்பாட்டிற்காக அனுமதி பெற்று சரள் மண் அள்ளிச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையைக் கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள்  முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கொத்தாழி கிராமத்திற்கு உள்பட்ட தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் இருந்து தோண்டும்போது கிடைத்த சரளை விவசாயப் பயன்பாட்டிற்கும், கரைகளை உயர்த்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று, டிராக்டரில் எடுத்துச் சென்றார்களாம். அப்போது, நாரைக்கிணறு காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அனுமதி பெற்று எடுத்துச் சென்ற 3  டிராக்டர் மற்றும் சரளை அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தையும் புதன்கிழமை பறிமுதல் செய்தார்களாம்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட விவசாயி அனுமதிச்சீட்டை காவல் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தாலும் டிராக்டர் மற்றும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்தார்களாம்.இதையடுத்து, அப்பகுதி கிராம மக்கள் தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி மற்றும் மக்கள் நீதி மய்ய மாவட்டப் பொறுப்பாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், உரிய ஆவணங்களுடன் விவசாயப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையைக் கண்டித்தும், பறிமுதல் செய்த டிராக்டரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கக் கோரியும் கோஷமிட்டனர். பின்னர், கோட்டாட்சியர் விஜயாவிடம் முறையிட்டனர்.கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் காவல் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education


Anbu Communications


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory