» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விரைவில் குடிநீர் விநியோகம் சீராகும் : ஆட்சியர் தகவல்

திங்கள் 29, ஜூலை 2019 4:17:14 PM (IST)தூத்துக்குடியில் விரைவில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்கனை பெற்றுக்கொண்டார்.

விரைவில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளங்களில் மணல்கள் கரைகளை பலப்படுத்தும் வகையில் அங்கேயே சேமிக்கப்படும். மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் பரிவல்லிக்கோட்டை, சாத்தனன்குளம், உடன்குடி, இளையரசநேந்தல் ஆகிய பகுதிகளில் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்திற்கு கடல் நீரில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக 6கிமீ தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்பேது 1 கிமீ தூரம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு தற்போது 300 கன அடி குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் 50 கன அடி நீர் திறந்துவிட நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் குடிநீர் பிரச்சனை சீரடைந்து 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார். 

நலதிட்ட உதவிகள் 

அதனைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.17,865 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம், சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் ஆதரவற்ற மாணவி ரா.மகேஸ்வரிக்கு கல்வி பயில கல்வி உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.25,000/-க்கான காசோலை, மீன்வள துறையின் மூலம் ஓகி புயலில் காணாமல் போய் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்ட மரிய பாரத் பெனில் என்பவரின் தாயார் சுதா என்பவருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை, வழங்கல் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், ஓய்வூதியருக்கு மருத்துவ காப்பீட்டுத்தொகையாக ரூ.74,000/-க்கான காசோலை என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.11,16,865 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் (பொ) சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கிறிஸ்டி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory