» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த 5 கலைஞர்கள் தேர்வு

புதன் 17, ஜூலை 2019 3:51:43 PM (IST)

தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2018-2019 ஆம் ஆண்டுக்கு விருது பெறும சிறந்த 5 கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. 

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2018-2019ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்கள், விருதுகள் வழங்கிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

2018-2019ஆம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் 16-07-2019 அன்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி உதவி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தூத்துக்குடி சுற்றுலா அலுவலர், தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை மு.சிவகாமசெல்வி கலைநன்மணி ஓவியர் பி.முருகபூபதி, கலைநன்மணி களியலாட்டக் கலைஞர் மு.பெருமாள், தெருக்கூத்துக் கலைஞர் கலைமுதுமணி எஸ்.சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களாக, வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கீழ்காணும் கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளனர்.

1. கலை இளமணி: தூத்துக்குடி .சீ. ஸ்ரீராம் (ஆர்மோனியம்)

2. கலை வளர்மணி: தூத்துக்குடி வீ.சக்திகுமார் (நாட்டுப்புறக்கலைஞர்)

3. கலைச்சுடர்மணி: தூத்துக்குடி க.நவநீதா (பரதநாட்டியம்)

4. கலைநன்மணி: கோவில்பட்டி எஸ்.மோகன்குமார் (ஓவியம்)

5. கலைமுதுமணி: தூத்துக்குடி ப.இராஜகோபால் (மிருதங்கம்)

மேற்படி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் விருதுக்கள், பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்க.


மக்கள் கருத்து

ராஜ்குமார்Jul 17, 2019 - 05:10:43 PM | Posted IP 173.2*****

(பரதநாட்ழயம்) பரத நாட்டியம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


CSC Computer Education

Anbu Communications
Thoothukudi Business Directory