» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சனி 13, ஜூலை 2019 3:43:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் கடன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களிடமிருந்து மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கீழ்கண்ட திட்டங்களுக்கு வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)

வேலையில்லா இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசு மானியத்துடன் வங்கிகளில் கடன் பெறும் விதமாக ‘யூ.ஒய்.இ.ஜி.பி.’ என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயது வரையுள்ள மற்றும் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1,50,000/-க்கு கீழ் உள்ளவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10.00 இலட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3.00 இலட்சம் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1.00 இலட்சம் என்ற அதிகபட்ச திட்ட முதலீட்டுக்கான தொழிற்கடன் விண்ணப்பங்களை வயது மற்றும் கல்வித்தகுதிக்கான சான்று, விலைப்பட்டியல், திட்ட அறிக்கை நகல்களுடன் (www.msmeonline.tn.gov.in/uyegp) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும்.

2. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) 

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சுயதொழிற் கடனுதவித் திட்டத்தின் கீழ், உற்பத்தி சார்ந்த தொழில் இனங்களுக்கு 25 இலட்சம், சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு ரூ.10.00 இலட்சம் என்ற அளவில் அதிகபட்ச திட்ட முதலீட்டுக்கான தொழிற்கடன்கள் மானியத்துடன் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு மானியமாக திட்ட முதலீட்டில் அதிகபட்சமாக 35% வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில்; விண்ணப்பித்து கடன் பெற விரும்பினால் www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் ‘pஅநபி ந pழசவயட’ - ல் பதிவு செய்ய வேண்டும்.

3. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)

குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும்; முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்கவும்; "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21க்கு மேல் 35க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இத்திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 25% அரசு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.30 இலட்சம்) கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையான திட்டங்களுக்கு கடன் பெறலாம். இந்த 2019-20 ஆம் நிதியாண்டில் இருந்து கூடுதலாக ஜே.சி.பி வாகனம், குளிர் பதன மறுசுழற்சி வாகனம், LPG புல்லட் டேங்கர், ப்ளை ஆஷ் கேரியர் டேங்கர் டிரக், கொள்கலனுடன் கூடிய டிரக், ரோடு ரோலர், பிட்டுமன் மிக்சிங் இயந்திரம் வண்டியுடன், டேங்கர் டிரக், பொருட்கள் கையாளும் இயந்திரங்கள, கிரேன் போர்க்லிபட், போர்வெல் மற்றும் ரிக்ஸ் வாகனம், ரெடிமிக்ஸ் கான்கிரிட் இயந்திரம், கான்கிரிட் மிக்சர் மிஷன், ரெக்கவரி வாகனம், கான்கிரிட் குழாய் வாகனம், தொழிற்சாலைகளுக்கு LPG/கேஸ் கொண்டு செல்லும் வாகனம், நடமாடும் உணவக வாகனம், ஆகிய தொழில்களுக்கு இத்திட்டத்தில் கடன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்பட்ட பயானளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும். வியாபாரம் சம்மந்தப்பட்ட தொழில்களுக்கு இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு சமீபம், தூத்துக்குடி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அறியலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory