» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுகவின் வெற்றியால் தமிழகத்திற்கு பலனில்லை : தூத்துக்குடியில தமிழிசை பேட்டி

வெள்ளி 24, மே 2019 3:59:44 PM (IST)

தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் தராது என பாஜக தலைவர் தமிழிசை கூறினார். 

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் தான் தங்கியுள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். 

நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது. நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

தற்போது மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வரும் காலத்தில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்நிலை உருவாகும். பின்னால் அது மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க.ஸ்டாலினால் வெளிநடப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

தமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். அதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். நாங்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் அதிக கவனம் பெற வேண்டும் என்ற எச்சரிக்கையை பெற்றுள்ளோம். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

தங்கம்மே 25, 2019 - 07:52:14 AM | Posted IP 108.1*****

தொகுதிக்கு ஆயிரம் கோடிகளை விதைத்து விளைந்த பயிர் - ஆனால் புண்ணியம் இல்லையே - பாவம்

சாமிமே 24, 2019 - 08:12:08 PM | Posted IP 108.1*****

மன்னிச்சிருங்க!உங்க பிள்ளைய திட்டிட்டேன்.

தூத்துகுடியன்மே 24, 2019 - 06:34:10 PM | Posted IP 108.1*****

தோல்வி அடைந்த காரணத்தினால் என்ன என்னமோ பேசுகிறார். கத்தி கத்தி பேசியதால் எந்த பயனும் இல்லை என்பதை இப்போது புரிந்து இருப்பீர்கள்.

maniமே 24, 2019 - 06:32:59 PM | Posted IP 173.2*****

விரைவில் வரும் இடை தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .அது வரை தூத்துக்குடி லேய தங்கள் பணி தொடர வேண்டும்.

ஆப்மே 24, 2019 - 06:10:25 PM | Posted IP 162.1*****

// கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது.// மோடிஜி மேலயும் ரபேல் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்.தேவையற்றதை பேசுவதை நிறுத்திவிட்டு நாட்டின் வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் பேச பழகினீர்கள் என்றால் ஒருவேளை தமிழ்நாட்டில் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ஆப்மே 24, 2019 - 06:06:17 PM | Posted IP 162.1*****

என்ன சொல்ல வரீங்க.தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் பார்த்து கொள்வோம் என்று அறைகூவல் விடுகிறீர்களா.உங்கள் எண்ணம் கெட்ட எண்ணமாக தோன்று கிறது.ஆட்சியில் இருந்தப்போ ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை செய்தீர்கள்.

சங்கி மங்கிகளுக்குமே 24, 2019 - 05:57:14 PM | Posted IP 173.2*****

தமிழகத்தில் டாமரை கட்சி மலரவே மலராது ....

சாமிமே 24, 2019 - 05:24:30 PM | Posted IP 162.1*****

சரியாக சொன்னீர்கள் - நாய் பெற்ற தெங்கம்பழம்

பாலாமே 24, 2019 - 04:43:05 PM | Posted IP 162.1*****

தாமரை கடலில் மலர்ந்த தீரும்..... ஹி ஹி ஹி.. எக்கோ உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory