» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.க., ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு பணம் குவிப்பா? தமிழிசை குற்றச்சாட்டு

திங்கள் 1, ஏப்ரல் 2019 3:15:39 PM (IST)தி.மு.க., 8 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையிலேயே வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பார்கள்? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.  நாளை காரைக்குடியில் இருந்து சிவகங்கை, பூவந்தி, மதுரை ரிங் ரோடு வழியாக தூத்துக்குடி வரும் எடப்பாடி பழனிசாமி ஜோதிபுரம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் கலந்து கொள்கிறார்.

இதற்காக அமித்ஷா விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வந்து பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். விழா மேடைகள் அமைக்கும் பணிகளை தூத்துக்குடி தொகுதி வேட்பாளரும், பா.ஜனதா மாநில தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. வெற்றி முகத்துடன் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும். 

எங்கள் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  துரை முருகன் வீட்டில் தற்போது நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். 8 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையிலேயே வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பார்கள். வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு. தேர்தல் நேரத்தில் அவர்களது சோதனையை தவறு என சொல்வதா? நான் நேர்மையான வேட்பாளர். ராகுல் காந்தி வடக்கே தோற்று விடுவோம் என்ற பயத்தில் தான் கேரளாவில் போட்டியிடுகிறார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வரி உயர்த்தப்படும் சூழல் உருவாகும்.  தி.மு.க. கூட்டணியினருக்கே அவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வட மாநில கருத்து கணிப்புகளில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. எங்களை பொறுத்த வரை 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். தூத்துக்குடி தொகுதியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நான் கூறுவதாக கனிமொழி சொல்கிறார். நாங்கள் நிறைவேற்றக்கூடிய நல்ல திட்டங்களை தான் சொல்கிறோம். என்றார். பேட்டியின் போது அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ மற்றும் பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

சாமிApr 2, 2019 - 04:10:00 PM | Posted IP 172.6*****

அப்புறம் எதுக்கு மிஸ்டர் துரியோதனன் இப்புடி அலறுகிறார்

ராமநாதபூபதிApr 2, 2019 - 11:38:23 AM | Posted IP 162.1*****

ஆள் தான் வளரலன்னு பார்த்த உனக்கு அறிவும் வளரலை. அடகூமுட்டை அது அனைத்தும் வேலுமணி பினாமி வீட்டில் எடுத்தது. உங்களை மாதிரி ரபேலில் அடித்தது இல்லை

உண்மைApr 2, 2019 - 11:32:23 AM | Posted IP 141.1*****

மத்தியில் ஆளும் உங்ககிட்டயும் எவ்வளவு இருக்கும் ?

துடியன்Apr 1, 2019 - 06:42:33 PM | Posted IP 141.1*****

திருடர்கள் முனேற்ற கழகம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory