» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

ஞாயிறு 24, மார்ச் 2019 10:33:12 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில், 100 சதவிகித வாக்களிப்பதன் அவசியம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில்  பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களும் 100 சதவிகித வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் விழிப்புணர்வு பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications



Thoothukudi Business Directory