» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஆலையை தொடர்ந்து இயங்காது ‍‍சந்தீப் நந்தூரி

வியாழன் 24, மே 2018 9:16:31 PM (IST)

தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் உணர்வுகளை புரிந்து ஆலையை தொடர்ந்து இயங்காது. இதன் அடிப்படையில் மின்சாரம் முழுமையாக தூண்டிக்க பட்டுள்ளது.ஆலைக்கான தண்ணீர் முழுமையாக தூண்டிக்க படும்.நடந்த கசப்பான விசயங்களை மக்கள் மறந்து இயல்பு நிலைக்கு வர வேண்டும்.போராட்டத்தின் காரணமாக இரு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு ஏற்பட்டது.83  பேர் காயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 19 பேர் தீவிர சிகிச்சை மேற்கொள்ளபட்டு வருகிறது,24 ஆண் காவலர், 10 பெண் காவலர் உட்பட 34  காவலர்கள் காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் இருந்து  ஓ மருத்துவர்கள்  வரழைக்கபட்டு உயர்தர சிகிச்சை மேற் கொள்ளபட்டு வருகிறது 78 இருசக்கர வாகனம்,24 கார்கள்,19 அரசு வாகனங்கள்,15 தனியார் வாகனங்கள் முழுமையாக சேதம் அடைந்தது உள்ளது.98 தனியார் வாகனங்கள்,11 தனியார் பைக்குகள்,16 அரசு வாகனங்கள் சேதம் என்று தெரிவித்தார்.மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகத்திற்க்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டு கொண்டார். இந்த பேட்டியின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளர் டேவிட்ர்,தென் மண்டல காவல்துறை தலைவர் சைலேந்திர குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Joseph Marketing
Thoothukudi Business Directory