» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடா பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு; தாக்குதல் நடத்தியர் தற்கொலை!
புதன் 11, பிப்ரவரி 2026 12:25:22 PM (IST)

கனடாவில் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக நேற்று மாலை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதுகாப்பு கருதி, பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனத் தற்காப்பு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தப் பள்ளி வளாகத்தையும் சுற்றி வளைத்த காவல்துறையினர், தாக்குதலாளியைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பள்ளி வளாகத்திற்குள் 6 பேரும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் 3 பேரும் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்குதலாளியை நெருங்குவதற்குள், அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொடூரச் சம்பவம் கனடா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டுப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி, 200பேர் படுகாயம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:22:20 PM (IST)

எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப் அரசுக்கு பின்னடைவு!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:26:05 AM (IST)

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்! – கட்டிடங்கள் சேதம்; கடலோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 11:25:20 AM (IST)

இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)









