» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷ்யாவுடனான வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக் கூடாது: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
வியாழன் 25, செப்டம்பர் 2025 11:08:24 AM (IST)
ரஷ்யாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என்று கூறினார். இந்நிலையில் அவரது விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது.இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், "அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. சீன நிறுவனங்களுக்கும், ரஷிய நிறுவனங்களுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி நடக்கின்றன.
அந்த நிறுவனங்கள் எந்த மூன்றாம் நாட்டையும் குறிவைத்து செயல்படவில்லை. ஆகவே, ரஷியாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)

ஹெலிகாப்டர் விபத்தால் வெடித்த மோதல்: ஈரான் மீது 2-ஆவது நாளாக அமெரிக்கா தாக்குதல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:31:12 PM (IST)

இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து மழை!
புதன் 10, ஜூன் 2026 5:26:56 PM (IST)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி, 200பேர் படுகாயம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:22:20 PM (IST)

எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப் அரசுக்கு பின்னடைவு!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:26:05 AM (IST)









