» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!

புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)



பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் அந்த உரையாடல் பற்றி, "நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓர் அற்புதமான உரையாடல் நிகழ்ந்தது.” என்று சிலாகித்துள்ளார். இது, 50% இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் சிதைந்திருந்த இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் வாழ்த்தியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்புக்கும், எனது 75வது பிறந்தநாளில் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களைப் போலவே, இந்தியா -அமெரிக்கா மற்றும் உலகளாவிய நல்லுறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் உறுதியாக உள்ளேன். உக்ரைன் மோதலில் அமைதியான தீர்வுக்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓர் அற்புதமான தொலைபேசி அழைப்பில் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு மகத்தான வேலையைச் செய்கிறார். ரஷ்யாவு - உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory