» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பகலில் மிடில் பர்த்தில் தூங்கத் தடை: ரயில்வே வாரியத்தின் முக்கிய விதிகள் அறிவிப்பு!
வியாழன் 26, மார்ச் 2026 12:34:45 PM (IST)

ரயில் பயணங்களில் நடுப்படுக்கையை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவான விதிகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
ரயில் பயணங்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Sleeper & AC Classes) மிடில் பர்த் எனப்படும் நடுப்படுக்கையைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பயணிகளிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க, நடுப்படுக்கையை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவான விதிகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
தற்போது ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது. குறிப்பாக, நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் ஏசி அல்லாத படுக்கை வசதி (Sleeper) மற்றும் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் டிக்கெட் பெறுபவர்கள், பயணத்தின் போது எப்போது உறங்கலாம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
மிடில் பர்த் - நேரக்கட்டுப்பாடு
ரயில்வே விதிகளின்படி, நடுப்படுக்கையை வைத்துள்ள பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அதைப் படுக்கையாக மாற்ற முடியும்:
தூங்கும் நேரம்: இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை மட்டுமே நடுப்படுக்கையை விரித்து உறங்க அனுமதி உண்டு.
பகல் நேரம்: காலை 6 மணிக்கு மேல் நடுப்படுக்கையை மடித்துவிட வேண்டும். அதன் பிறகு, கீழ் படுக்கையில் (Lower Berth) அமர்ந்து பயணம் செய்யும் வகையில் சக பயணிகளுக்கு இடமளிக்க வேண்டும்.
விலக்கு யாருக்கு?
இந்தக் கால அளவு விதியில் இருந்து சிலருக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:
கர்ப்பிணிகள்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் (நோயாளிகள்).
மாற்றுத்திறனாளிகள்.
முதியவர்கள்.
இவர்கள் கூடுதல் நேரம் உறங்க விரும்பினால், சக பயணிகளின் ஒப்புதலோடு அல்லது டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) அனுமதி பெற்றுத் தூங்கலாம்.
கீழ் மற்றும் மேல் படுக்கை விதிகள்:
மேல் படுக்கை (Upper Berth): மேல் படுக்கையில் இருப்பவர்களுக்குத் தூங்குவதற்கு நேரக் கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உறங்கலாம்.
கீழ் படுக்கை (Lower Berth): பகல் நேரங்களில் மிடில் பர்த் மற்றும் அப்பர் பர்த் பயணிகள் அமர்வதற்கு இடமளிக்க வேண்டும்.
சில பயணிகள் விதியை மீறி பகல் நேரங்களிலும் நடுப்படுக்கையை விரித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்தால், பயணிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) புகார் அளிக்கலாம். அவர் விதிகளின்படி தலையிட்டுத் தீர்வு காண்பார்.
பயணிகள் இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, இனிமையான ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம் எனத் தெற்கு ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்லாந்திலிருந்து ரூ.11.82 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி அதிரடி கைது
சனி 13, ஜூன் 2026 12:30:17 PM (IST)

ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா: 3 மாலுமிகள் பலி - இந்தியா கண்டனம்!
வியாழன் 11, ஜூன் 2026 4:01:42 PM (IST)

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கூடாரம் சரிந்தது: ஒரே வாரத்தில் 3-ஆவது எம்பி அதிரடி ராஜிநாமா!
வியாழன் 11, ஜூன் 2026 12:39:46 PM (IST)









